ரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு

ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
 சுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்ட 36 ரஃபேல் ரக அதிநவீன போர்  விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திடம் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கறி ஞர் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத் தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த ஊழல் குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை துவக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வழங்கவுள்ளது.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்