11 ஆண்டுகள் கழித்து இன்று பழி தீர்த்த கேன் வில்லியம்சன்!


ind-vs-nz-cricket-world-cup-2019-kane-williamson-took-revengge-on-virat-kohli-after-11-years

மான்செஸ்டர் : இன்று 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, நம் இந்திய அணியை தோல்வியடைய செய்து தொடரை விட்டு வெளியேறச்செய்தது அனைவரும் அறிந்ததே.
அதிலும் லீக் போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை தழுவி சென்ற நியூசிலாந்து அணி, தற்போது இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இன்றைய வெற்றி மூலம் நியூசிலாந்து அணியின் 11 ஆண்டுகளுக்கு முன் (2008ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து போட்டி)  விராட் கோலியின் தலைமையில் ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டுள்ளது.

அன்று நடந்த போட்டியில் இளம் வீரர்களாக விராட் கோலி - கேன் வில்லியம்சன் தங்கள் அணிகளுக்கு(இந்தியா - நியூசிலாந்து) தலைமை ஏற்று வழி நடத்தினர். அப்போது இந்திய அணி டிஎல்எஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது

இன்று 11 ஆண்டுகள் கழித்து 2019 உலகக்கோப்பை அரையிறுதி அதேபோல் விராட் கோலி - கேன் வில்லியம்சன் தலைமையிலான அணிகள் விளையாடியதில் இந்தியா 49.3 ஓவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இனி நியூசிலாந்து அணி அடுத்து இறுதிப் போட்டியில் மிக விரைவில் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவை சந்திக்க உத்யேகமாக உள்ளது.

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்