ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.

நார்த்ல இதெல்ல சகஜம் போல...

ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ். nixs.in


அவரவர் ஒரு அரசு வேலயாச்சும் கிடைக்குமா என போட்டி போட்டு தேர்வு எழுதி 10,000, 20, 000ம்னு கோச்சிங் சென்டர் போகி காத்துக்கிடக்குற  இந்த வேளையில் பத்னாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் 30 ஆண்டுகளாக
மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி சம்பளம் பெற்று வந்துள்ளார் . இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.


தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசு வேலை என்பது வெள்ளை காக்காவை பார்ப்பது போன்றதும் குதிரைக்கொம்பான விஷயம் போன்றதும் தான்.
அதிலும் இப்பொழுது நிறைய பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

எம்பிளாய்மென்ட் அலுவலகத்தில் வேலைக்காக கால்கடுக்க நின்று பதிவு செய்துவிட்டு, இன்ஜினீரிங், கலை உள்ளிட்ட அணைத்து துறையினரும் வேலைக்காக அல்லாடிக்கொண்டிருக்கும் இந்த சமயத்துல வெளிவந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அடையாளத்திற்காக ஆதார் கார்டு, பான் கார்டு, நுழைவு சீட்டு உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் முப்பது ஆண்டுகளாக அரங்கேறியுள்ளது. அதிலும் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த மூன்று அரசு வேலையிலும் இவர் தவறாது பணியாற்றி சம்பளமும் வாங்கியுள்ளார். இது இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


சுரேஷ் ராம் பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். இவர் வகித்த பணிகள் பின்வருமாறு
பீகார் மாநில அரசு பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளர்.
பங்கா என்ற மாவட்டத்தின் நீர் மேலாண்மைத் துறையில் அரசு அதிகாரி.
பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரி.
இந்த மூன்று அரசு வேலைக்காகவும் 30 ஆண்டுகள் சம்பளமும் வாங்கி வந்துள்ளார்.

இப்படி இருக்க பீகாரில் அண்மையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது தான் ஒரே பெயர் ஒரே விலாசத்தில் மூன்று அரசு வேலைகளை சுரேஷ் ராம் செய்து வந்ததை உயர் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அப்போது தான் தெரிந்தது. இந்த விஷயம்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்