மத உணர்வுகளை புண்படுத்தும் Zomato... #ZomatoUninstalled | தங்கள் மதத்திற்கு எதிராக செல்ல கட்டாயப்படுத்தும் zomato

zomato-protest


தங்கள் மதத்திற்கு எதிராக செல்ல கட்டாயப்படுத்தும் zomato

கொல்கத்தா: ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் ஒன்றான ஜொமாடோ, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை சில zomato ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்..

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சொன்னதாவது "எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வண்ணம் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி உணவுப் பொருட்களை டெலிவரி செய்யுமாறு Zomato நிறுவனம் தங்களை கட்டாயப்படுத்துகிறது.

எவ்வளவு எடுத்துச்சொல்லியும் ஜொமாடோ தங்கள் குறைகளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது "

zomato-protest


மேலும் "அவர்கள் (நிறுவனம்) எங்கள் மத உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். நிறுவனமும் எங்களை அச்சுறுத்துகிறது. எந்தவொரு ஆர்டரையும் வாடிக்கையாளருக்கு வழங்க நிறுவனம் எங்களை கட்டாயப்படுத்துகிறது.

இந்துக்களான நாங்கள் மாட்டிறைச்சி டெலிவரி செய்யும்படி கட்டாயப்படுத்திகிறார்கள், அதே போல்  முஸ்லிம் சகோதரர்கள் பன்றி இறைச்சியை டெலிவரி செய்யும்படி கட்டாயப்படுத்திகிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. நிறுவனம் எங்கள் மத உணர்வுகளுடன் விளையாடக்கூடாது என்றும், டெலிவரி செய்யும் முறையையும் எங்கள் கோரிக்கையை மனதில் வைத்து திருத்தப்படவேண்டும் , ”என்று ஒரு எதிர்ப்பாளர் செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.

இந்து அல்லாத டெலிவரி ஊழியர் வழங்கிய ஆர்டரைப் பெற ஒரு வாடிக்கையாளர் மறுத்ததால் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் மற்றொரு சர்ச்சையில் சிக்கியது.

zomato-protest




இதற்கிடையில், மேற்கு வங்க அரசு இந்த சம்பவத்தை அறிந்ததோடு, டெலிவரி ஊழியர் தங்கள் மதத்திற்கு எதிராக நிறுவனம் கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறினார்.

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்