உலக குரங்குகள் தினம்

WorldMonkeyDay
WorldMonkeyDay

இன்று உலக குரங்குகள் தினம், ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் ஆறறிவு கொண்ட மனிதனை விட
பன்மடங்கு இரக்க குணத்திலும்
தாய்மையிலும் மேல்
என்பதை நிரூபிக்கும்
மற்றொரு உண்மை நிகழ்வு இது. இந்த பதிவையும் புகைப்படத்தையும் பார்த்து விட்டு
கண் கலங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.
ஆப்பிரிக்காவில் உள்ள
போட்ஸ்வானாவில் உள்ள காடுகளில்
‘நேஷனல் ஜியாகரபி’ சானலுக்காக சில
ஆண்டுகளுக்கு முன்பு
படம்பிடிக்கப்பட்ட புகைப்படம் இது. நண்பர்
ஒருவர் என்னை அடையாளம் கண்டு என்னுடன் பகிர்ந்திருந்தார்.
அனைவரும்
பார்க்கட்டுமே என்று இங்கு தனிப்
பதிவாக தருகிறேன்.
காட்டில் பசியோடு திரியும் சிறுத்தை ஒன்று தூரத்தில் ஒரு குரங்கை பார்த்துவிட, ஒரே பாய்ச்சலில் குரங்கிடம் சென்று அதை ஒரே அறையில் அடித்து வீழ்த்துகிறது.
(குரங்குகள் சிறுத்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இரண்டுக்கும் ஆகவே ஆகாது.) சிறுத்தையின் தாக்குதலில் குரங்கு உடனே இறந்துவிடுகிறது.
அப்போது தான் பார்க்கிறது….
அன்று பிறந்த அதன்
குட்டி ஒன்று அந்த குரங்கின்
மடியிலிருந்து வெளியே வருகிறது.
ஒரு தாயை கொன்றுவிட்டோமே அதன் குட்டியை அனாதையாக்கிவிட்டோமே என்கிற குற்ற உணர்வு அதன்
பசியை மறக்கச் செய்கிறது.
நடப்பது என்னவென்றே தெரிந்து கொள்ளமுடியாத அந்த
குரங்கு குட்டியை பார்க்கும் சிறுத்தைக்கு என்னவோ போலாகிவிடுகிறது .
அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கிறது. இதனிடையே இரத்த
வாடையை மோப்பம்
பிடித்து ஒரு கழுதைப்புலி கூட்டம்
ஒன்று அங்கு வந்துவிடுகிறது. கழுதைப்புலிகளிடம் இருந்து குரங்குக்
குட்டியை பாதுக்காக்க
வேண்டி சிறுத்தை அதை கவ்வி சென்று மரத்தின் மீது பாதுகாப்பாக வைத்துவிடுகிறது .
குட்டி கீழே விழுந்துவிட
ஒவ்வொரு முறையும்
சிறுத்தை அதை காப்பாற்றி மேலே
கொண்டு வந்து வைக்கிறது. குரங்குக்
குட்டியை பாதுகாக்க
வேண்டி சிறுத்தை இரவு முழுவதும்
கண் விழித்தது.
தன சுயநலத்துக்காக செய்த பாவங்களை பற்றிய குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு நடுவில் இந்த
விலங்குகளே மேல் அல்லவா?
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்