நீங்க சொன்னாதான் நடக்கும்... விளையாட்டு வீராங்கனைகளுடன் பேசிய பிரதமர்... கொரோனா வைரஸ் விவகாரம்


டெல்லி : கொரோனா வைரஸ் பொறுத்தமட்டில் மத்திய/மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
pm-holds-meet-with-sportspersons-on-coronavirus-lockdown-seeks-support-to-spread-awareness
pm-holds-meet-with-sportspersons-on-coronavirus-lockdown-seeks-support-to-spread-awareness 
pm-holds-meet-with-sportspersons-on-coronavirus-lockdown-seeks-support-to-spread-awareness
pm-holds-meet-with-sportspersons-on-coronavirus-lockdown-seeks-support-to-spread-awareness



நாடு முழுவதும் 21 நாட்கள் 144 மற்றும் சோசியல் டிஸ்டன்சிங் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.


மேற்கத்திய நாடுகளைப்போல் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக அவர் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறித்து தொடர்ந்து நாட்டு மக்களிடம் வீடியோ, ஆடியோ முறையில் பேசிவருகிறார்...
மேலும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஆலோசனை மேற்கொண்ட மோடி, தற்போது 40க்கும் மேற்பட்ட இந்திய முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடனும் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.

ஊரடங்கு : கொடிய கொரோனா வைரஸ் தொற்று மெல்லமெல்ல பரவி சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்களை வேட்டையாட ஆரம்பிக்க துவங்கியவுடன் மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு நாடுமுழுவதும் 21 நாள் ஊரடங்கை கடந்த 24ம் தேதி அறிவித்தது. இதனால் இயல்புவாழ்க்கையை முற்றிலும் தொலைத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்

இருப்பினும் பல இடங்களில் இயல்புக்கு மாறான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக விழிப்புணர்வு இல்லாத சிலர் எதற்க்காக இந்த ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது என்பதனை உணராமல் வெளியே தேவையில்லாமல் சுற்றித்திரிகின்றனர்...

காவல்துறையும் கூடுமானவரை முயன்றும் பயனில்லை..


பிரதமர் ஆலோசனை: இந்நிலையில், முன்னாள் வீரர்கள், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், துப்பாக்கி சுடும் வீரர் அபிஷேக் வர்மா உள்ளிட்ட 49 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி வீடியோ கால் மூலம் கொரோனா குறித்து ஆலோசனை மேற்கொண்டார். விளையாட்டு வீரர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வீடியோ கால் மூலமான இந்த உரையாடலில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்