எல்லை பிரச்னைக்கான ப சிதம்பரத்தின் கேள்விகள்

எல்லை பிரச்னைக்கான ப சிதம்பரத்தின் கேள்விகள்
புதுடில்லி: இந்திய சீனா எல்லை பிரச்னையால் கடந்த வாரம் முதல் சீனா ராணுவத்துடன் கைகலப்பு நிகழ்ந்தது இந்த தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., திரு ப சிதம்பரம், பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்திய சீனா எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதனையடுத்து ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில் சீன ராணுவத்தினர் 35க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை சீனா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி_யுமான ப சிதம்பரம், பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
1. சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.
2. அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை?
3. இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா?
4. ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?
5. “கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
6. இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மௌனம் கலைந்தது, இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?
7. ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?
8. மே மாதம் 5ஆம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் திரு ஜீ யைத் தொடர்பு கொண்டீர்களா?
9. சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?


Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்