சூரிய கிரகணம்: செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்ன?

சூரிய கிரகணம்: செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்ன?

சென்னை;

சூரியன் சந்திரன் மற்றும் பூமி மூன்றும் ஒரே  நேர் கோட்டில் சந்திக்கும்போது
சூரியனின் ஒளி சந்திரனால் மறைக்கப்படும் அச்சமயம் ஏற்படும் நிழல் புவியின் மீது விழும்பொழுது  அதனை சூரிய கிரகணம் என்பர்... அதுவும் முழு நிழலும் விழும் இடத்தில் இருக்கும் மக்களால் வளையயம் போன்று தொன்றும் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும்... அந்த நேரத்தில் சில வழக்கத்திற்கு மாறான கதிர்களும், சூழ்நிலையும் வந்துசேரும் அப்படிப்பட்ட ஒரு வளைய சூரிய கிரகணம் ஜூன் 21 ல் நிகழ்கிறது. இது காலை 10:22 முதல் பகல் 1:32 மணி வரை நீடிக்கிறது. அடுத்த சூரிய கிரகணம் 2020 டிச., 14ல் தோன்றும்.

செய்யக்கூடாதது:

1. வெறும் கண்களால் சூரியனை பார்ப்பதை தவிர்க்கவேண்டும். சூரிய கண்ணாடியோ அல்லது ஒளியை குறைத்துக் காட்டும் பொருட்களை வைத்து பார்க்கலாம்.
 2. சூரிய கிரகத்தின் போது உணவு உண்ணுவதை தவிர்க்கவும். காலை 9 மணிக்கு முன்பும் மதியம் 2 மணி கழித்தும் சாப்பிடலாம்
3. கர்ப்பிணிகள் வெளியே செல்லுவதை தவிர்க்கவும்.

செய்யக்கூடியது:

1. ஞாயிற்று கிழமை பிறந்தவர்கள், மற்றும் (ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில்சூரிய திசை, புத்தி உள்ளவர்கள்) உள்ளவர்கள் கல்லுப்பு சேர்த்த தண்ணீரில் 2 மணிக்கு பிறகு குளிப்பது நல்லது.
2. குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்கு நடை திறந்தபின் செல்லலாம்.
3. இஷ்டதெய்வங்களின் மந்திரங்களை ஜபிக்கலாம்.(உ.ம்: ஸ்ரீராமஜெயம், ஓம் நமசிவாய)
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்