எல்லைப் பிரச்னை....திசை திருப்ப இந்திய அரசு முயற்சி: பாக்கிஸ்தான் குற்றச்சாட்டு

பாக்கிஸ்தான்: இந்திய எல்லையில் பிரச்னைகளில் இருந்து, அனைவரையும் திசை திருப்ப பல முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய அரசே இதனை செயல்படுத்திவருவதாகவும் பாக்கிஸ்தான்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தாளின் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க, இந்திய அரசு முடிவு செய்தது, அதேபோல் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையையும், பாதியாக குறைக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதற்கு காரணம் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் இந்தியாவில் உளவு வேலை பார்த்தாக இந்திய அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.. இதற்காக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது...

இதனை மேற்கொள் காட்டி பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி " சீனா, பாகிஸ்தானுடனான இந்தியாவின் எல்லை பிரச்னைகளில் இருந்து, அனைவரையும் திசைத் திருப்பவே, இந்திய அரசு, இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது." என்றும் "சீனா எல்லை பிரச்னையின்போது  இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டது குறித்து, எதிர்க்கட்சிகள், இந்திய அரசிடம் கேள்வி எழுப்பி வரும்நிலையில் அதற்கு பதிலளிக்க முடியாமல் அரசு உள்ளது. இதனை சமாளிக்கவே இந்த இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது." என்று கூறினார்
Tamil News
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்