வழக்கறிஞர் உத்தமகுமரன் இப்போ கூடை பின்னும் தொழிலாளி! - லாக்டெளனால் கொடுமை

வழக்கறிஞர் உத்தமகுமரன் இப்போ கூடை பின்னும் தொழிலாளி!  - லாக்டெளனால் கொடுமை

வழக்கறிஞர் உத்தமகுமரன்:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழக்கறிஞர் உத்தமகுமரன், இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் மனைவி, மகனுடன் ஒரு சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் என்றபோதிலும் படிப்பறிவே அறியாத தனது மக்களின் சார்பாக படிக்கவேண்டும், படிப்பு ஒன்றே தன்னையும் தன்னை சார்ந்த மக்களையும் உயர்த்தும் என்று எதிர்வந்த பல்வேறு சிரமங்களை கடந்து முனைப்புடன் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

வழக்கறிஞர் உத்தமகுமரன் செயல்கள்

நேர்மையுடன் தான்புரியும் வக்கீல் தொழிலில் வரும் வருமானத்தின் மூலம் தன் குடும்ப தேவைகளையும் தனது பகுதி மக்களுக்கு தேவையான, தன்னால் இயன்ற சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தனது வாழ்வாதாரமான வக்கீல் தொழிலும் முற்றிலுமாக முடங்கியது. இருந்த காசு முற்றிலும் தீர்ந்துபோனது.
வக்கீல் தொழிலில் வரும் வருமானத்தின் மூலம் தன் குடும்பத்தை நடத்தி வந்ததுடன் தன் பகுதியில் வசிக்கும் தன் இனமக்களுக்கு சின்னச் சின்ன உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக லாக்டெளன் பிறப்பிக்கப்பட்டதால் தனது வக்கீல் தொழிலும் முற்றிலுமாக முடங்கியது. வருமானம் இல்லாமல் போனதால் கொஞ்ச நாள்களிலேயே கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது.

வேறென்ன செய்ய

இப்படிப்பட்ட நிலையில் தன்னையும் தன்னை சார்த்தோரையும் காக்க எண்ணிய உத்தமகுமரன் சிறுவயதில் தன் குடும்பத்துடன் செய்துவந்த தங்கள் இனத்தின் பாரம்பர்ய தொழிலான கூடை முடைதல் தொழிலை தற்போது செய்ய தொடங்கியுள்ளார். ஆற்றோர  பகுதிக்குச் சென்று அதன் ஓரங்களில் உள்ள ஈச்சங்கோரைகளை வெட்டி கூடை முடைய ஆரம்பித்தார். கூடை தேவைப்படுவோர் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டே நாள்களை நகர்த்தி வருகிறார்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்