உடுமலை சங்கர் கொலை வழக்கு: இதுதான் நியாயமா? தந்தை விடுவிப்பு; தண்டனை குறைப்பு!!!

உடுமலை:

முன்னதாக உடுமலை சங்கர் நாடு ரோட்டில் வைத்து கவுசல்யாவின் தந்தை மற்றும் உறவினரால் ஆணவக் கொலை செய்யப்பட்டார்... இந்த கொடூர சம்பவத்தில் கவுசல்யாவின் தந்தை மற்றும் சம்பவத்திற்கு உடன் செயல்பட்ட உறவினர்கள் ஆகியோருக்கு நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.இந்த  விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியக் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Udumalpet honour killing: Madras high court acquits Kausalya's father

என்ன நடந்தது?

பழனியைச் சேர்ந்த கவுசல்யா தன்னுடன் கல்லூரியில் படித்த சங்கர் என்கிற தலித் இளைஞரை காதலித்தார் வீட்டில் விஷயம் தெரியவரவே பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2015ல் திருமணம் செய்தார். இவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கலத்தில் உள்ள கணவர் சங்கர் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, கவுசல்யாவும் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இருவரையும் கத்திகளால் சரமாரியாக வெட்டினர். இதில் சங்கர் பலத்த காயமடைந்தார். இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.. செல்லும் வழியிலேயே சங்கர் மிகுந்த இரத்தப்போக்கு மற்றும் காயங்களினால் உயிரிழந்தார்.
Udumalpet honour killing: Madras high court acquits Kausalya's father

Udumalpet honour killing: Madras high court acquits Kausalya's father Image from dinamalar

கவுசல்யாவுக்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் கவுசல்யா  சிகிச்சைபெற்று குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியிருந்தது.

இந்த ஆணவக்கொலைக்கு கவுசல்யாவின் பெற்றோர் சின்னச்சாமி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட, 11 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு போடப்பட்டது. வழக்கு விசாரணை நடத்தி 1,500 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இதில் நெருங்கிய உறவினர்களான தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்திலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு  கைதுசெய்யப்பட்டனர்...

தீர்ப்பு:

2017ல் ஆண்டு டிச., 12ம் தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை உட்பட 9 பேரில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் 11வது குற்றவாளி மணிகண்டன் - 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேல் முறையீடு

தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல் முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பிலிருந்தும் இந்த தீர்ப்பிற்கு ஆதரவாகவும் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராகவும் அரசுத் தரப்பு கோரிக்கை விடப்பட்டது.

இன்றைய தீர்ப்பு:

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் முதல் குற்றவாளியான கவுடால்யாவின் தந்தையுமான சின்னச்சாமியின் தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். மற்ற ஐந்து குற்றவாளிகளின் தண்டனை குறைக்கப்பட்டது. 

கவுசல்யா வேதனை:

இந்த தீர்ப்பு தொடர்பாக கவுசல்யா, "இப்படிப்பட்ட தீர்ப்பு மூலம் ஒருபாவாவும் செய்யாத எங்களுக்கு அநீதி தான் அளிக்கப்பட்டுள்ளது எனவும் சங்கரின் ரத்தத்திற்கு நீதி கிடைக்கவில்லை. சின்னச்சாமியும், அன்னலட்சுமியும் குற்றவாளி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது உண்மை என்றால் இந்த நேரம் சங்கர் உயிருடன் இருந்திருப்பர்,  என்னுடன் வாழ்ந்திருப்பார். எனது சட்ட போராட்டம் தொடரும்" இவ்வாறு அவர் கூறினார்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்