சசிகலா வருகைக்கு முன் தினகரனுக்கு வலைவிரிக்கும் பாஜக... விட்டு விலகும் வலதுகரம்

சென்னை:அ ம மு க கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் அரசியல் வாழ்க்கையில் வலதுகரமாக இருக்கும் சென்னையை சேர்ந்த பிரமுகருக்கு பாஜக தன்பக்கம் இழுக்க வலை விரித்திருப்பதாக தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போதிருந்தே ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் நம்பிக்கைக்குரியாக நபராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவு,  சசிகலாவின் சிறைவாசம் இவற்றிக்கு பின் இப்போது டி.டி.வி. தினகரனின் நம்பிக்கைக்குரிய நபராகவும் இருக்கிறார். பல முக்கிய அரசியல் முடிவுகள், ஆர்.கே.நகர் தொகுதியில் வெல்வதற்கு வியூகம் அமைப்பதிலும் இந்த பிரமுகர்தான் காரணம். சமயம் அறிந்து களப்பணியாற்றுவதில் கில்லாடி...

சசிகலா வருகைக்கு முன் தினகரனுக்கு வலைவிரிக்கும் பாஜக... விட்டு விலகும் வலதுகரம்

அப்பல்லோ மர்மம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  அப்பல்லோ சிகிச்சை தொடர்பான ரகசியங்கள் நிறையவே தெரிந்தவர். அந்த நேரத்தில் இவர்தான் சில போட்டோக்களையும் தகுந்த நேரத்தில் வெளியிட்டார். அந்த சமயம் தினகரனின் கட்சியில் இருந்து பலரும் கொத்து கொத்தாக வெளியேறிய போதும் இவர் தினகரனுடனேயே இருந்தார்.

கொரோனா நேரத்தில்

கொரோனா காலகட்டத்தின் ஆரம்பத்தில் அத்தனை கட்சிகளும் மக்களுக்கு பணியாற்றிய நேரத்திலும், தினகரன் தரப்பில் அறிக்கைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை சரியாக புரிந்துகொண்டு தினகரனிடம் சுட்டிக்காட்டி காலத்தில் பணி செய்ய வேண்டும் என வலியுறுத்திப் பார்த்தார். அப்போதுதான் மக்கள் நம்பிக்கையை பெற முடியும் என்றார்.

சசிகலா விடுதலை:

சசிகலா சிறை சென்றபோதிலிருந்து அவர் வெளியேவர அனைத்து பணிகளையும் செய்துவந்தார் அதன் விளைவாக சசிகலா வெளியே வருகிறார்; அப்போது அதிமுக அணிகள் இணைகிறது என்றெல்லாம் செய்திகளும் வெளியாகின. இதில் தமக்கு முழுமையாக உடன்பாடு இல்லை என்பதாக சென்னை பிரமுகர் தினகரன் தரப்புக்கு திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
சசிகலா வருகைக்கு முன் தினகரனுக்கு வலைவிரிக்கும் பாஜக... விட்டு விலகும் வலதுகரம்

வலைவிரிக்கும் பாஜக

இந்த நிலையில்தான் பாஜக கட்சியிலிருந்து அந்த சென்னை பிரமுகருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறதாம். ஆனால் சென்னை பிரமுகர் சரியான பிடிகொடுக்காமல் அவர்கள் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்