இந்தியா ஆதரவு - தென்சீன கடல் எல்லையில் அமெரிக்கா அடி மேல் அடி வாங்கும் சீனா

பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா  குரல் கொடுத்துள்ளது இதனையடுத்து அங்கு மீண்டும் தனது போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி மீண்டும் அமெரிக்கா தனது கால்த்தடத்தை பதித்து உள்ளது.



ஆறு நாடுகள் பகிர்ந்துகொள்ளக் கூடிய தென் சீன கடல் எல்லை பரபரப்பை சீனா ஒட்டுமொத்தமாக தனக்குமட்டும் சொந்தம் என்று கூறுகிறது. இந்த பிரச்சனை தற்போது உலகம் முழுமைக்குமான பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த கடல் பகுதியில் இருக்கும் அளவில்லாமல் கிடைக்கும் எண்ணெய் மற்றும் வர்த்தக போக்குவரத்தை கருத்தில் கொண்டு அங்குள்ள 90% மேற்பட்ட  இடங்களை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 

ஆனால் இதே கடல் எல்லையில்தான் மலேசியா, வியட்நாம், தைவான், புரூனாய், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் வர்த்தகத்திற்கான பாதையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது சீனா செய்த இந்த செயலால் இந்த கடல் பகுதியில் சீனா அடிக்கடி அத்துமீறுவது அதிகமாகிவிட்டது. அதுமட்டுமின்றி மற்ற நாடுகளை பயமுறுத்துவதற்காக சீனா அரசு இந்த பகுதிகளில் அடிக்கடி போர் பயிற்சிகளை மேற்கொள்வதும் வழக்கம் ஆகிவிட்டது. இதுதான் தென் சீன கடல் எல்லை பிரச்னைக்கு காரணம்.

சீனாவின் இந்த செயல்பாடுகளால் உலக நாடுகள் மொத்தமாக பொங்கியெழுந்தது. இந்த நிலையில் அமெரிக்கா கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் இந்த இடத்தில் தனது படைகள் மற்றும் போர் கப்பல்களை வரிசையாக இறக்கி ரோந்து பணிகளை செய்யத்தொடங்கியது. இதன்மூலம் மலேசியா, வியட்நாம், தைவான், புரூனாய், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்கா படைகளை அனுப்பியது.

சீனாவின் அத்துமீறல் குறைந்ததை அடுத்து அமெரிக்காவின் போர் கப்பல்கள் அங்கிருந்து கடந்த 9ம் தேதி திரும்பி சென்றது. தனது வழக்கமான பயிற்சிஇடமான பசிபிக் கடலின் நடுப்பகுதிக்கு சென்றது. பின் மீண்டும் நேற்று இரவு அமெரிக்காவின் போர் கப்பல்கள் சீனாவின் கடல் பகுதிக்கு மிக அருகில் வந்துள்ளது.

இதற்க்கு இந்தியா அனுப்பிய மெசேஜ் ஒன்றுதான் காரணம் என்று கூறுகிறார்கள். சீனா சொந்தம் கொண்டாடும் கடற்பரப்பு சர்வதேச கடல் போக்குவரத்து இடமாகும் சீனாவின் அத்துமீறலால் அமைதி கேட்டுவிடக்கூடாது என்பதே அந்த மெசேஜ் ஆகும்...




Tamil News
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்