புது டெல்லியில் டிராக்டர் பேரணிக்கு தடை போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்-உச்சநீதிமன்றம்

டிராக்டர் பேரணிக்கு தடை போலீசார் தான் தீர்மானிக்க வேண்டும்-உச்சநீதிமன்றம்


மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் ஒரு மாதத்திற்க்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படவில்லை. புதிதாக இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை முற்றிலும் அகற்றுவதே விவசாயிகளின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. இதனை தொடர்ந்தது இந்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மூன்று சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், வரும் ஜன.,26ல் குடியரசு தினத்தில் டில்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்தன.

குடியரசு தினத்தன்று, டில்லியில் இதுபோன்ற டிராக்டர் பேரணி உட்பட, எந்தப் போராட்டத்தில் ஈடுபடவும் தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகள் பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது.

‛டில்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் டில்லி போலீசுக்கு உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது,' எனக்கூறி பேரணி தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சுதந்திர இந்தியாவில் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் போராட்டத்துடன் நிகழும் முதல் குடியரசு தின விழா இதுவே

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்