FACT CHECK: பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் படம்!

FACT CHECK: பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் படம்!

பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று, சமூக வலைத்தளத்தில் கடந்தவருடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தின் படத்தை வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


” இயேசு அழைக்கிறார் ” என்ற கிறிஸ்தவ அமைப்புக்கு தலைவராகவும் இருக்கும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாமல் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் ரூ.118 கோடி முதலீடு செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இப்படி இருக்க, "பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்" என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Validation:


தகவலின் விவரம்:



அசல் பதிவைக் காண:

Facebook Claim 1  I Archive Link - Facebook Claim 2  I Archive Link

பரவிய இந்த கட்டுக்கட்டாக பணத்தை அடிக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை கூகிள் இமேஜ் சேர்ச் செய்கையில், "திருவாரூரில் அரிசி ஆலையில் லஞ்சம் பெற்றபோது பிடிபட்ட நாகை மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய  சோதனையின்போது ரூ.62 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது" 11 Dec 2020 2 PM விகடனில் மு.இராகவன் ஆசிரியர் எழுதிய செய்தி கிடைத்தது.

இந்த செய்தியில் உள்ள புகைப்படத்தை, பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.


Fact Check :

கோவை - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் நடந்துவந்த வருமான வரித்துறையினர் சோதனையில், அவர் ரூ.1000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி ஊடகங்களில் தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. 

இந்த நிலையில், பால் தினகரனுக்கு சொந்தமான எதோ ஒரு இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்று கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்ட ஒரு படம் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது எனினும் கைப்பற்றப்பட்ட பணம் மிகக் குறைவாக உள்ளதே என்ற சந்தேகத்தின் பேரில் இந்த புகைப்படம் பால் தினகரனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதுதானா என்று ஆய்வு செய்யப்பட்டது.

இதன் மூலம் கூகிள் இமேஜ் சேர்ச் செய்யப்பட்டபோது கிடைத்த தகவல்: இந்த புகைப்படம் இதற்க்கு முன்னே வேறு இணையதளங்களில் வேறு செய்தியுடன் தொடர்பு படுத்தி வந்தது தெரியவந்தது அதன் தொகுப்புகள் பின்வருமாறு: 



அசல் பதிவைக் காண: 




Google Search | Archive - Twitter | Archive - dtnext.in I Archive - vikatan.com I Archive - hindutamil.in I Archive


முடிவு:

இதன் மூலம், இந்த புகைப்படத்துக்கும் கோவையை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன்  பணத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது. மேலும் இது பழைய செய்தியிலிருந்து படத்தை எடுத்துவந்து பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று தவறாக சித்தரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் அதிகமாக பகிர்ந்து வருவது உறுதி செய்யப்படுகிறது.


வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9442504341) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Diwakaran - Editor

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்