பெண் கான்ஸ்டபிளை 2 நாள் டிராபிக்குக்கு மாற்றி 12 மணி நேரம் வேலை வாங்கிய கூடுதல் பெண் துணை கமிஷனர்

சிவில் உடையில் இருந்த தன்னை அடையாளம் தெரியாத காரணத்தினால், பெண் கான்ஸ்டபிளை 2 நாள் டிராபிக்குக்கு மாற்றி 12 மணி நேரம் வேலை வாங்கிய கூடுதல் பெண் துணை கமிஷனருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொச்சி நகர சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக ஐஸ்வர்யா டோங்ரே என்பவர் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பதவியேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்கு ஆய்வு செய்வதற்காக ஐஸ்வர்யா சென்றார். அப்போது, போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்துள்ளார். முகத்தில் மாஸ்க்கும் அணிந்துள்ளார். அதனால், உயரதிகாரியை அடையாளம் காண முடியாமல் காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், அவரை தடுத்த என்ன ஏதுவென்று விசாரித்துள்ளார்.

விசாரித்ததில் தன் உயரதிகாரி என்பதை எதரிந்து கொண்டு உடனடியாக துணை கமிஷனரை போலீஸ் நிலையத்துக்குள்ளும் அனுமதித்து விட்டார். ஆனாலும், கோபமடைந்த துணை கமிஷனர் ஐஸ்வர்யா, 'என்னை அடையாளம் தெரியாமல் எப்படி தடுக்கலாம்' என்று கூறி அந்த பெண் அதிகாரியிடத்தில் விளக்கம் கேட்டுள்ளார். பெண் போலீஸ் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கம் அளித்தும் ஏற்றுக் கொள்ளாத துணை கமிஷனர் ஐஸ்வர்யா, கொச்சியில் கடும் டிரைபிக் உள்ள உயர்நீதிமன்ற பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட அந்த பெண் போலீசுக்கு உத்தரவிட்டார்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்